WORLD DIABETES DAY-2025

FREE SIDDHA MEDICAL CAMP AT SRIPERUMBUDUR

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு வேலு மயிலு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச நீரிழிவு மருத்துவ முகாம் 17-11-2025 அன்று ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ பூதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.
முகாமினை தர்மா கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் திரு S. முத்து பெருமாள் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். கல்லூரி முதல்வர் டாக்டர் K. பாலகுருசாமி மற்றும் துணை முதல்வர் டாக்டர் S. சுரேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் நகர மன்ற தலைவர் திருமதி S. சாந்தி சதீஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இலவச சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.